எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? |
தெலுங்கில்
பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'ராஜா சாப்'.
இயக்குனர் மாருதி இயக்கி வரும் இந்த படத்தில் கதாநாயகிகளாக மாளவிகா மோகனன்,
நிதி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை டி ஜி விஷ்வபிரசாத்
தயாரிக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதமே இந்த படம் ரிலீஸ் ஆவதாக
சொல்லப்பட்டு பின்னர் டிசம்பர் 5ம் தேதி என்று மீண்டும் உறுதியான அறிவிப்பு
வெளியானது. அதன்பிறகு அந்த தேதியும் மாற்றப்பட்டு தற்போது வரும்
சங்கராந்தி பண்டிகைக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது என்று புதிய
அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. தரமான விஎப்எக்ஸ்
காட்சிகளுக்காக தான் இந்த தாமதம், அதனால் ரசிகர்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்
என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட படத்தின் தயாரிப்பாளர்
கூறியிருந்தார். இந்த நிலையில் பட ரிலீஸ் ஏன் தாமதம் என்பது குறித்து ஒரு
பகீர் தகவலை தற்போது வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் விஷ்வபிரசாத்.
இதுகுறித்து
அவர் கூறும்போது, “இந்த படத்தின் விஎப்எக்ஸ் பணிகளை ஒரு பிரபல
நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். இந்த வருடம் ஏப்ரலில் படத்தை வெளியிட
திட்டமிட்டு இருந்தோம். ஆனால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வரை அந்த
நிறுவனத்தின் விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் எங்கள் படத்தின் பணிகள் எதையுமே
துவங்கவில்லை. அந்த சமயத்தில் அவர் புஷ்பா 2 உள்ளிட்ட சில படங்களுக்கு
முக்கியத்துவம் கொடுத்து வேலை பார்த்து வந்தார். இது குறித்து இயக்குனர்
மாருதி கேட்க சென்ற போது ஏதாவது சொன்னீர்கள் என்றால் இந்த படத்தில் இருந்து
விலகி விடுவேன் என்று அவரை மிரட்டியுள்ளார்.
இவர் இதே போன்று
செய்வதை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளார். சமீபத்தில் கூட இயக்குனர் ராஜமவுலி
படத்தில் இருந்து இவர் நீக்கப்பட்டார். அதனால் தான் ராஜா சாப் படத்தின்
ரிலீஸ் தாமதமானது. சினிமாவில் இருந்து கொண்டே இப்படி எங்களுக்கு இடைஞ்சல்
கொடுப்பவர்கள் பற்றி ஏற்கனவே 'கார்த்திகேயா 2' படத்தின் போது
கூறியிருந்தேன். இப்போது ராஜா சாப் படத்தில் இவர்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம்
அந்த சூப்பர்வைசரின் பெயரை கூற விரும்பாத தயாரிப்பாளர் விஷ்ணு பிரசாத்,
அதே நிறுவனத்தில் தான் மீண்டும் ராஜா சாப் பணிகளை தொடர்கிறாரா இல்லை வேறு
நிறுவனத்திற்கு மாற்றி விட்டாரா என்பது பற்றியும் எதுவும் கூறவில்லை.