'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி |
மலையாளத்தில் கடந்த 2017-ல் வெளியான ‛அங்கமாலி டைரீஸ்' என்கிற படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. அதன்பிறகு ஜல்லிக்கட்டு, சுருளி என கிராமத்து பின்னணியில் எதார்த்த கதைகளை படமாக்கிய அவர், பின்னர் மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் மோகன்லாலை வைத்து மலைக்கோட்டை வாலிபன் ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் அவர் முதன்முறையாக ஹிந்தியில் அடி எடுத்து வைக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனரான ஹன்ஷல் மேத்தா இந்த படத்தை தயாரிக்கிறார். கூடவே லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் என்கிற தகவலையும் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.