கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு |
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹ்ரித்திக் ரோஷன். தற்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டில் வெளியான 'சூப்பர் 30' படத்தை அவரின் 'ஹெச்.ஆர்.எக்ஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார்.
இப்போது 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஆர்வத்தை காட்ட தொடங்கியுள்ளார். அதன்படி, ஹ்ரித்திக் ரோஷன், அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனத்துடன் இணைந்து புதிய வெப் தொடரை தயாரிக்கவுள்ளனர். இந்த வெப் தொடருக்கு 'ஸ்டோர்ம்' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த வெப் தொடரை அஜித்பால் சிங் இயக்குகிறார். இதில் பார்வதி திருவொத்து, ஆல்யா, ஸ்ருஷ்டி ஸ்ரீ வஷ்டவா, ராம சர்மா, சபா அஷாட் உள்ளிட்டோர் இந்த வெப் தொடரில் இணைந்து நடிக்கின்றனர். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது என அறிவித்துள்ளனர்.