பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் ஆகியோர் இணைந்து நடித்து ரிலீஸிற்கு தயாராகி வரும் படம் 'வா வாத்தியார்'. இதுதவிர பிரதீப் ரங்கநாதன் உடன் ‛எல்.ஐ.கே' படத்தில் நடித்துள்ளார். இதையொட்டி கிர்த்தி ஷெட்டி அளித்த பேட்டியில், "பிரதீப் ரங்கநாதனை நான் கவனித்த வகையில் அவருடைய கணிப்பு எல்லாம் தெளிவாக உள்ளது . எல்.ஐ.கே பட டீசரில் 'எனக்கென யாருமில்லையே' என ஒரு பாடல் இடம் பெற்றது. அந்த பாடல் பத்து வருடத்திற்கு முன்பு அனிரூத் பாடியது. அந்தப் பாடலை இந்த டீசரில் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என பிரதீப் தான் கணித்தார். பிரதீப் ரங்கநாதன் படப்பிடிப்பில் சிரித்த முகத்துடன் எப்போதும் இருப்பார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு அழகான சூழலைக் கொண்டு வந்துவிடுவார்" என தெரிவித்துள்ளார்.