டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை |

வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் அவரது கடைசி படமாக அறிவித்து நடித்துள்ள படம் 'ஜனநாயகன்' . பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதியன்று படம் திரைக்கு வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து தளபதி கச்சேரி என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த படத்திலிருந்து இரண்டாவது பாடல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் அறிவித்தபடி, இந்த படத்தின் இசை வெளியீட்டு பிரமாண்டமாக மலேசியாவில் டிசம்பர் 27ம் தேதியன்று நடைபெறுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக ஜனவரி 1ம் தேதியன்று புதிய வருடப்பிறப்பை முன்னிட்டு ஜனநாயகன் பட டிரைலரை வெளியிட முடிவு செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.