டிக்கெட் உயர்வை அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா தியேட்டர் சங்கம் | என்னை யாரும் கண்டுகிடலை.. நொறுங்கிய என் ஈகோ: பெங்களூருவில் ரஜினிகாந்த் பேச்சு | 6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' | ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்… |

தெலுங்கில் நின்னு கோரி, மஜிலி, குஷி போன்ற படங்களை இயக்கியவர் சிவா நிர்வாணா . இவரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக ரவி தேஜா நடிக்கவுள்ளார் என தகவல் பரவியது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார் என்கிறார்கள். ஏற்கனவே பீமா, ஜீப்ரா ஆகிய தெலுங்கு படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் கடைசியாக தமிழில் பிளாக் என்ற படத்தில் நடித்தார். இதுதவிர இந்தியன் 3 மற்றும் டிமான்டிகாலனி 3 படங்கள் அவர் கைவசம் உள்ளன. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஆக காந்தாரா படத்தின் மூலம் பிரபலமான அஜனேஷ் லோகேஷ் என்பவர் இசையமைக்கிறார். ஆக் ஷன், த்ரில்லர் ஜானரில் உருவாகிறது.




