விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி | 'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ? | 'ஜனநாயகன்' வழக்கு விவகாரம் : அடுத்து என்ன நடக்கலாம்? | மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி |

நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா சில சீரியல்களில் நடித்து வந்தார். இப்போது பெயரிடப்படாத படத்தில் ஹீரோயின் ஆகி உள்ளார். கே.எஸ்.கிஷான் இயக்கும் இந்த படம் குறித்து ஜோவிதா கூறுகையில், "என் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. இது ஹாரர் ஜானர் கதை. அப்பாவுக்கு நான் சினிமாவில் நடிப்பதில் விருப்பமில்லை. அவரை சமாதானம் செய்த பின்னரே சினிமாவில் நடிக்க சம்மதம் வாங்கினேன். சின்னதிரைக்கு சிறு இடைவேளைவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தப்போகிறேன். இந்த படத்தில் அப்பாவும் நடிக்கிறார். இதுவரை நாங்கள் இணைந்து நடித்தது இல்லை. அந்த படப்பிடிப்பு எப்படி இருக்கும் என தெரியவில்லை" என்றார்.
லிவிங்ஸ்டன் பேசுகையில், ‛‛சினிமா ஏற்ற இறக்கம் நிறைந்தது. எப்போதும் ஒரே மாதிரி வெற்றி இருக்காது. அதனால் மகள் சினிமாவில் நடிக்க வேண்டாம் என விரும்பினேன். அவள் பாடகி ஆகணும் என ஆசைப்பட்டேன். ஆனால் அவள் நடிக்க வந்துவிட்டாள். மலையாள சினிமா இயக்குநர்களிடம் இருக்கும் ஒற்றுமை தமிழ் சினிமாவில் இல்லை. அங்கே ஒரு கதை மற்ற இயக்குனர்களுக்கு சொல்கிறார்கள். அதை சரி செய்கிறார்கள். இங்கே அது இல்லை. நல்ல கதைகள் அமைந்தால் சின்ன படங்கள் நிச்சயமாக ஜெயிக்கும். உதாரணமாக நடிகர் மணிகண்டனின் லவ்வர், குட் நைட், குடும்பஸ்தன் போன்ற படங்கள் ஹிட் ஆகி உள்ளது. நல்ல கதைகள் தோற்றதாக வரலாறு இல்லை'' என்றார்.




