பாரத், சான்வீயின் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை | இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் | பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது |

தெலுங்கில் வெளிவந்த 'ஜெயிலு பக்ஷி' என்ற படத்தை தமிழில் 'சிறை பறவை' என்ற பெயரில் உருவாக்கினார்கள். இந்த படத்தை மனோபாலா இயக்கினார். விஜயகாந்த், ராதிகா, மலேசியா வாசுதேவன், வெண்ணிற ஆடை மூர்த்தி, செந்தில், லட்சுமி, குழந்தை நட்சத்திரமாக ஷாலினி நடித்தனர். பி ஆர் விஜயலட்சுமி ஒளிப்பதிவு செய்தார். இளையராஜா இசையமைத்தார்.
தெலுங்கு படமான 'ஜெயிலு பக்ஷி' யிலும் ராதிகாவே ஹீரோயினாக நடித்திருந்தார். சோபன் பாபு நாயகனாக நடித்திருந்தார். இது ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படமாக இருந்ததால் ராதிகாவை சுற்றி கதை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் விஜயகாந்த் இந்த கதையில் எனக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை, அதனால் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.
பின்னர் இயக்குனர் மனோபாலாவும் திரைக்கதை ஆசிரியர் கலைமணியும் விஜயகாந்த்தை சந்தித்து தமிழில் உங்களுக்கு முக்கியத்துவம் இருப்பது போன்று காட்சிகளை அமைத்து புதிதாக திரைக்கதை அமைத்திருக்கிறோம் என்று அவரை சமாதானப்படுத்தினார்கள்.
இதனால் ராதிகாவின் காட்சிகள் குறைக்கப்பட்டு விஜயகாந்தின் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டது. விஜயகாந்த் ராதிகாவும் அப்போது நெருக்கமான நண்பர்களாக இருந்ததால் இதற்கு ராதிகாவும் ஒப்புக்கொண்டு நடித்தார்.