'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் | நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா |

மற்ற துறைகளை விட எப்போதுமே சினிமாவில் சென்டிமென்ட் அதிகமாக பார்க்கப்படும். ஆனால் அதையும் தாண்டி வெற்றி பெற்ற பெரிய நட்சத்திரங்கள் உண்டு.
இளையராஜா இசையமைத்த முதல் பாடல் பதிவின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிவாஜி நடித்த முதல் படம் வெளிவரவில்லை, ரஜினி நடித்த முதல் படத்தில் அவருடைய பல காட்சிகள் நீக்கப்பட்டன. எஸ் எஸ் ராஜேந்திரன் நடித்த முதல் படத்தின் அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டது. இதையெல்லாம் தாண்டித்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இது போன்ற ஒரு அனுபவம் கே பாலச்சந்தருக்கும் உண்டு அதுவும் அவரது முதல் படத்திலேயே.
கே பாலச்சந்தர் அரசு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது எழுதிய நாடகம் 'நீர்க்குமிழி'. நாடகத்தை படித்த தயாரிப்பாளர் ஏ.கே வேலன், 'இதை நாடகமாக நடத்த வேண்டாம் நேரடியாக சினிமாவாக தயாரிக்கலாம் அதையும் நீங்களே டைரக்ஷன் செய்யுங்கள்' என்று கூறினார்.
நான் திரைக்கதை வசனம் மட்டும் எழுதுகிறேன் எனக்கு டைரக்ஷன் தெரியாது என்று மறுத்தார் கே பாலச்சந்தர் என்றாலும் வற்புறுத்தி இயக்க வைத்தார் ஏ கே வேலன்.
வி.குமார் இசையில் உவமை கவிஞர் சுரதா எழுதிய 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' பாடலைத்தான் முதல் நாளில் பதிவு செய்ய முடிவு செய்தார்கள். நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவரும் வந்து நிற்க, முன்பணம் கொடுப்பதாகச் சொல்லியிருந்த பைனான்சியர் வரவில்லை. பாடல் பதிவு ரத்து செய்யப்பட்டது.
இதற்கு நெகட்டிவ் சென்டிமென்ட் தான் காரணம் என்றார்கள். 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' என்று தொடங்கும் பாடலும் 'நீர்க்குமிழி' என்ற நெகட்டிவ் தலைப்பும் காரணம் என்று சென்டிமென்ட் பயம் காட்டினார்கள். ஆனால் இதனைக் கே.பாலச்சந்தர் ஏற்கவில்லை, படம் பெரிய வெற்றி பெற்றது.
நாகேஷ் ஹீரோவாக நடித்தார். தனது உடல் மொழியாலும் ஜாலி எக்ஸ்பிரஷன்களாலும் படத்தை கலகலப்பாகக் கொண்டு செல்லும் அவர், எமோஷனல் காட்சிகளிலும் மிரட்டியிருப்பார். சவுகார் ஜானகி, வி.கோபாலகிருஷ்ணன், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயந்தி, ஐ.எஸ்.ஆர், எஸ்.என்.லட்சுமி உள்பட பலர் நடித்தார்கள். நிமாய் கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.