மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

பாரதிராஜா இயக்கிய 'நிழல்கள்' படத்தில் அறிமுகமான நிழல்கள் ரவி, சந்திசேகர், ராஜசேகரன், ரோகினி ஆகியோர் பின்னாளில் பெரிய உயரத்திற்கு சென்றார்கள். ஆனால் அந்த படத்தில் நாயகியாக நடித்த ராது எங்கே என்று யாருக்கும் தெரியாது.
ராதுவின் இயற்பெயர் ராடிகா ரங்நாட், பாரதிராஜா தனது ஆர் வரிசை நடிகைகள் படி அவருக்கு ராது என்று பெயர் வைத்தார். அடிப்படையில் ராது பரதநாட்டிய கலைஞர், நடன நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். அவரை அழைத்து வந்துதான் பாரதிராஜா நடிக்க வைத்தார்.
அதன்பிறகு, மம்முட்டியுடன் 'என்னு நாதண்டே நிம்மி' படத்திலும், மோகன்லாலுடன் ' கடநாடன் அம்படி'யிலும் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். மளமளவென இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அவர்களை வளர்க்கவும், வேலையில்லாத கணவனை காப்பாற்றவும், நடன பள்ளிகள் தொடங்கி நடத்தினார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 'ஒருவர் வாழும் ஆலயம்' என்ற படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதன்பிறகும் அவருக்கு வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் மும்பைக்கே சென்று தனது நடன பள்ளிகளை நடத்த தொடங்கினார்.