மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

கண்ணன் ரவி தயாரிக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க ஜெய் நடிக்கும் 'டெக்ஸ்லா' பட தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: என் மகள் ஐஸ்வர்யாவுக்காக இந்த விழாவுக்கு வந்தது மிகவும் சந்தோஷம். வித்தியாசமான படங்களை பண்ணுவதற்கு ஐஸ்வர்யா ஆர்வமாக இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ரஜினி, கமல் இணைந்து நடிப்பது எங்களுக்கு ஸ்பெஷல் மொமன்ட். அந்த காலத்திலிருந்து அவர்கள் நடிக்கிறார்கள். இவர்கள் இணைந்து மீண்டும் நடிப்பது இளம் தலைமுறைக்கு மிகவும் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறது. இந்த முயற்சி அடுத்த தலைமுறைக்கு ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். தமிழ் சினிமாவுக்கு மைல்கல்லாக அமையும் இரண்டு பேரையும் நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்.
இசையமைப்பாளர்அனிருத் கதாநாயகனாக நடிப்பது அவருடைய விருப்பம். அவர் பன்முகத் திறமை கொண்டவர் எதையும் கச்சிதமாக செய்யக்கூடியவர். உங்களைப்போல 'ஜெயிலர் 2' டிரைலர், டீசர் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றேன்.
மனசுக்கு பிடித்த காரியங்களை எடுத்து செய்வது ஒரு மிகவும் முக்கியம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை ஒரு மகளாக பார்ப்பது மிகவும் பெருமைப்படுகிறேன். என் இளைய மகள் சவுந்தர்யா தயாரித்த 'வித் லவ்' படம் வெற்றி அடைந்தது மகிழ்ச்சி. அவளின் 'கோச்சடையான்' படம் புதிய முயற்சி. இப்போது நடந்த ஏ.ஐ மாநாட்டில் கூட அது பற்றி பேசினார்கள். கோச்சடையான் படத்தை ரீ ரிலீஸ் செய்ய முயற்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.