மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் நடித்த 'தேவரா' படத்தை அடுத்து தற்போது ராம் சரணுக்கு ஜோடியாக 'பெத்தி' என்ற படத்தில் நடித்துள்ளார் ஜான்வி கபூர். புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். சிவராஜ் குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 30ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ராய் ராய் ரா ரா' என்ற இரண்டாவது பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இப்பட நாயகி ஜான்வி கபூரின் பிறந்த நாளை ஒட்டி படக்குழு ஒரு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில், ஸ்டைல் நிறைந்த ஒரு கிராமத்து பெண்ணாக கவர்ச்சிகரமாக தோன்றுகிறார் ஜான்விகபூர். இப்படத்தில் அவர் அச்சியம்மா என்ற வேடத்தில் நடித்துள்ளார்.