மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

பாடலாசிரியராக இருந்த கண்ணதாசன், ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் ஆனார். கண்ணதாசன் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அவர் தயாரித்த படம் 'மாலையிட்ட மங்கை'. ஜி.ஆர்.நாதன் இயக்கியிருந்தார். டி.ஆர்.மகாலிங்கம், பண்டரிபாய், மனோரமா, மைனாவதி, பத்மினி பிரியதர்ஷினி, காகா ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். கண்ணதாசன் வசனம், பாடல்கள், எழுதியிருந்தார். மராட்டிய எழுத்தாளர் சந்திர நாத் எழுதிய 'சரத் சந்திர சட்டோபாத்யாய' என்ற நாவலை தழுவி உருவானது.
சினிமாவில் புகழின் உச்சியில் இருந்து விட்டு பின்னர் சொந்த படம் தயாரித்து தோல்வி அடைந்து, சினிமாவை விட்டே விலகி நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த டி.ஆர் மகாலிங்கத்திற்கு இந்த படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கண்ணதாசன். அதன்பிறகு மகாலிங்கம் நிறைய படங்களில் நடித்து கடன்களை அடைத்து, இழந்த சொத்துக்களை மீட்டார்,
நாடங்களில் நடித்துக் கொண்டிருந்த மனோரமாவை அழைத்து வந்து இந்த படத்தில் காமெடி நடிகையாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தார் மனோரமா. சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மைனாவதிக்கு இந்த படத்தில் பெரிய கேரக்டர் கொடுத்து புகழ்பெற வைத்தார். பின்னர் மைனாவதி கன்னட சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.