பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

நடிகை கீர்த்திசுரேஷ் கதைநாயகியாக நடித்த 'ரிவால்வர் ரீட்டா' வரும் 28ம் தேதி ரிலீஸ். சென்னையில் நடந்த இந்த பட விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ''இது டார்க் காமெடி படம். பின்னே எதுக்கு இந்த பெயர், என் கையில் ஏன் துப்பாக்கி என கேட்கலாம். அதுதான் கதை. காமெடி கலந்த ஆக்ஷன் கதை என சொல்லலாம். ஸோ, குடும்பத்துடன் பார்க்கலாம்.
ராதிகா மேடம் தயாரித்த 'இது என்ன மாயம்' படத்தில்தான் நான் தமிழில் அறிமுகம் ஆனேன். இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்து இருக்கிறேன். அவர் நடிப்பு பயர். பல சீன்களில் எங்களை துாக்கி சாப்பிட்டுள்ளார். நடிகர் சென்ட்ராயன் தான் பேசிய ஒரு வார்த்தையை சென்சார் நீக்கிவிட்டதாக சொன்னார். அது கெட்ட வார்த்தை. கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும்'' என்றார்.
இயக்குனர் சந்துரு பேசுகையில், ''லாக்டவுன் காலத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதையை எழுதினேன். கீர்த்தி மேடத்துக்கு பிடித்த படமானது. இதில் அம்மா கேரக்டரில் நடிக்க ராதிகாவை அணுகினேன். இது ஓகே. இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். அவர் கேரக்டரை பக்தி பழமாக்கி எடுத்து இருக்கிறேன். அவர் நடிப்பு, பேச்சு, கெட்அப் எல்லாருக்கும் பிடிக்கும்'' என்றார்.
இந்த இயக்குனர் இதற்கு முன்பு 'நவீன சரஸ்வதி சபதம்' என்ற படத்தை இயக்கியவர். 2013ல் வெளியான இந்த படத்தில் ஜெய், நிவேதா தாமஸ் நடித்து இருந்தனர். 'டியூட்' படத்தில் காமெடி கலந்த அமைச்சராக நடித்த சரத்குமார் நடிப்பு பேசப்பட்டது. அதேபோல், இந்த படத்தில் ராதிகா ஸ்கோர் செய்துள்ளார் என படக்குழுவினர் கூறுகின்றனர்.