'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் |

ஜே.கே. சந்துரு இயக்கத்தில் கதைநாயகி ஆக கீர்த்திசுரேஷ் நடித்த 'ரிவால்வர் ரீட்டா' படம், நவம்பர் 28ல் ரிலீஸ் ஆகிறது. படம் குறித்து கீர்த்திசுரேஷ் பேசுகையில், ''என் திருமணத்துக்குபின் இந்த படம் வருகிறது. என் கணவர் இந்த படத்தை பார்த்துவிட்டார். இனி, இப்படி தனியாக பார்க்க வேண்டாம். தியேட்டரில் பார்க்கிறேன் என்கிறார். அவருடன் நடிக்கிற ஐடியா இல்லை. அவர் சினிமா என்றால் தெறித்து ஓடிவிடுவார். இந்த படத்தில் ஒரு குடும்பத்தில் இருக்கிற பெண்ணுக்கு என்ன பிரச்னை வருகிறது. அவள் ஏன் துப்பாக்கி எடுக்கிறார் என்ற ரீதியில் கதை செல்கிறது.
நடிகை ராதிகா, சூப்பர் சுப்பராயன் மாஸ்டருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இதற்கும் 'கோலமாவு கோகிலா' படத்துக்கும் சம்பந்தம் இல்லை. அதன் அடுத்த பாகமும் இது இல்லை. ஆரம்பத்தில் என் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள், கிண்டல், கேலிகள் வந்தன. 'தொடரி' படத்தை அவ்வளவு கிண்டல் செய்தார்கள். ஆனால், தொடரி படத்தை பார்த்துவிட்டுதான் 'மகாநடி' படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தார் அந்த இயக்குனர். அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.
எல்லாம் நன்மைக்கே என நினைத்துக்கொள்வேன். இன்னமும் மகாநடி படத்தின் தாக்கம் இருக்கிறது. சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகமாகிவிட்டன. அவர்களிடம் வாழு, வாழுவிடுங்கள் என்றுதான் கேட்கப்போகிறேன். அடுத்தகட்டமாக ஏ.ஐ வீடியோ பாதிப்பு அதிகமாக இருக்கிறது. நானும், சமந்தாவும் இருக்கிற ஒரு ஏ.ஐ வீடியோ பார்த்து நானே பயந்துவிட்டேன். ஒரு சில ஏ.ஐ. போட்டோக்களை பார்க்கும்போது நாம் இப்படி போஸ் கொடுக்கவில்லையே என்று யோசிக்கும் அளவுக்கு , அந்த ஏ.ஐ போட்டோக்கள் மிரள வைக்கின்றன. வெளிநாடுகளில் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பு இருக்கிறது. நம் நாட்டில் அந்த நிலை வரணும். அதற்கேற்ப சட்டத்திட்டங்கள் கொண்டு வர வேண்டும். எனக்கு படம் இயக்க ஆர்வம் இருக்கிறது. அதற்கு ஸ்கிரிப்ட் எழுதி வருகிறேன்'' என்றார்.