'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே |

சமீப காலங்களாக மிகப்பெரிய கதையை உருவாக்கி விட்டு அதை இரண்டு பாகங்களாக எடுக்கும் போக்கு ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஏற்கனவே ஹிட்டான படங்களுக்கு இரண்டாம் பாகத்தை உருவாக்குவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் நடிகர் பிரித்விராஜூக்கு கடந்த 2013ல் ஜீத்து ஜோசப் டைரக்சனில் தான் நடித்த 'மெமரிஸ்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்கிற விருப்பம் இருக்கிறது. நாளை (நவ.,21) பிரித்திவிராஜ் நடிப்பில் 'விலாயுத் புத்தா' என்கிற படம் வெளிவர இருக்கும் நிலையில் அது குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவரிடம் 'உங்களது எந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உங்களுக்கு விருப்பம்?' என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பிரித்விராஜ், 'இதுபோன்ற விஷயங்களை சம்பந்தப்பட்ட படத்தை உருவாக்கியவர்கள் சொன்னால் சரியாக இருக்கும். ஆனால் ஜீத்து ஜோசப், மெமரிஸ் படத்தில் இரண்டாம் பாகத்தை உருவாக்க அவரே விரும்பி அந்த விருப்பத்தை என்னிடமும் சொன்னார். அதே சமயம் ஒரு நடிகனாக என்னுடைய படங்களில் எந்த படத்தை இரண்டாம் பாகமாக எடுக்க வேண்டும் என்று கேட்டால் நானும் மெமரிஸ் திரைப்படத்தை தான் சொல்வேன். இது குறித்து இருவருமே நேரம் கிடைக்கும் சமயங்களில் பேசியிருக்கிறோம். இப்போது நான் இந்த விஷயத்தை வெளிப்படுத்தி விட்டதால் ஒருவேளை இதை அவர் கைவிட்டு விட மாட்டார் என நம்புகிறேன்” என்று வேடிக்கையாக கூறினார் பிரித்விராஜ்.