“என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? |

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில், வரும் நவம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'விலாயத் புத்தா'. இந்த படத்தை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார். எழுத்தாளர் இந்து கோபன் எழுதிய விலாயத் புத்தா என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான படத்தின் டீசர் மற்றும் டிரைலரைப் பார்த்தபோது இது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் சாயலில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
காரணம் இந்த படத்தில் பிரித்விராஜ் டபுள் மோகனன் என்கிற சந்தன மர கடத்தல்காரனாக நடித்துள்ளார் என்பதுதான். டீசரில் கூட, நான் புஷ்பா அளவுக்கு பெரிய ஆள் இல்லை என்று பிரித்விராஜ் கூறும் வசனம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரித்விராஜ், புஷ்பா படத்தின் கதைக்கும் விலாயத் புத்தா படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை மறைந்த அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் சாச்சி படமாக்க திட்டமிட்டு என்னிடம் கூறியபோது புஷ்பா முதல் பாகமே ரிலீஸ் ஆகி இருக்கவில்லை. தவிர இது எழுத்தாளர் இந்துகோபன் எழுதிய நாவல். அதன்பிறகு இந்த படத்தை இப்போது முடித்து ரிலீஸ் செய்வதற்குள் புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகிவிட்டன. என்னுடைய டபுள் மோகனன் கதாபாத்திரத்திற்கும் புஷ்பராஜ் கதாபாத்திரத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. இரண்டுக்கும் கதைக்களம் ஒன்று போல தோன்றினாலும் கதையில் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் தான் காலதாமதம் ஆனாலும் கூட இந்த படத்தை விடாமுயற்சியுடன் படமாக்கி திரைக்கு கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறினார்.