
மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்!
மலையாள நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இதிலும் குறிப்பாக தெலுங்கில் "சீதா ராமம், லக்கி பாஸ்கர்" என தொடர் படங்களின் வெற்றியால் தெலுங்கு மொழி படங்களில் அதிகளவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.
இந்த நிலையில் மற்றொரு புதிய தெலுங்கு படத்தையும் ஒப்பந்தம் செய்துள்ளார் துல்கர் சல்மான். அதன்படி, பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான பீபுல் மீடியா நிறுவனம் தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குவதற்கான பேச்சு வார்த்தை தெலுங்கில் "ரச்சா, பெங்கால் டைகர், செட்டிமார்" உள்ளிட்ட படங்களை இயக்கிய சம்பத் நந்தி உடன் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!