மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் |

மலையாள திரை உலகில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குறிப்பிடத்தக்க இயக்குனராக படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் வினயன். தமிழில் விக்ரம் நடித்த 'காசி' மற்றும் 'என் மன வானில்' உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். பெரும்பாலும் மலையாள நடிகர் சங்கத்திற்கும் இவருக்கும் ஒரு மோதல் போக்கு இருந்துகொண்டே தான் இருக்கும்.
இந்த நிலையில் இரண்டு வருடங்கள் தனக்கு சினிமாவில் இருந்து தடை விதிக்கப்பட்ட காரணம் குறித்து சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் வினயன். பெரும்பாலும் இயக்குனர் வினயன் ஹாரர் படங்களை அதிகம் எடுத்திருப்பதால் கிராபிக்ஸ் பணிகளுக்கு மெனக்கெடுவார்.
அந்த வகையில் இவரது இயக்கத்தில் மணிகுட்டன் நடித்த 'பாய்பிரண்ட்' எனும் படத்தில் கிராபிக்ஸ் மூலமாக மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரின் புகைப்படங்களையும் அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக தனக்கு இரண்டு வருடம் தடை விதிக்கப்பட்டது. இதுப்பற்றி பேசிய அவர், ''முன்பு என் படத்தில் மோகன்லால், மம்முட்டி ஆகியோரை அனுமதியின்றி கிராபிக்ஸில் காண்பித்ததற்காக 2 ஆண்டு தடை விதித்தனர். ஆனால் இப்போது ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு யார் யாரோ இவர்கள் இருவரின் படங்களையும் தாங்கள் நினைத்தது போல பயன்படுத்தி வருகிறார்கள். இதை தடுக்க முடியுமா என்ன ?” என்று கூறியுள்ளார்.