ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

நடிகை நயன்தாரா தனது 41வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அதை முன்னிட்டு அவர் நடிக்கும் படக்குழு சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளது. முதலாவதாக அவர் கதைநாயகியாக நடிக்கும் மூக்குத்திஅம்மன் 2 குழு, ஒரு அழகான போஸ்டர் வெளியிட்டது. அதை தொடர்ந்து அவர் கதைநாயகியாக நடிக்கும் மண்ணாங்கட்டி, ஹாய், டியர் ஸ்டூடன்ட்ஸ் படக்குழுவும் போஸ்டர் வெளியிட்டது.
தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் குழுவும், அவர் ராணியாக நடிக்கிறார் என்ற அறிவிப்புடன் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. இந்த படங்களில் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டதால், அடுத்தாண்டு நயன்தாரா நடிப்பில் பல படங்கள் வர வாய்ப்பு, பாலகிருஷ்ணா படம் மட்டும் அடுத்த ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டு வரலாம் என்று தகவல்.
இப்போது இந்த படங்கள் தவிர சிரஞ்சீவியுடன் ஒரு படம், யஷ் நடிக்கும் டாக்சிக், ராக்காயி, பேட்ரியாட் படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். ஆக, அவர் கைவசம் 9 படங்கள் இருக்கிறது. இந்த கணக்கை பார்த்தால் தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்திய அளவில் அதிக படங்களில் நடித்து வரும் ஹீரோயின் நயன்தாரா தான்.
நயன்தாராவின் அன்னபூரணி படம் வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் நடித்த டெஸ்ட் சில மாதங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியானது. கடந்த 5 ஆண்டுகளில் மூக்குத்தி அம்மன், ஹிந்தியில் ஜவான் என 2 வெற்றி படங்களை மட்டுமே நயன்தாரா கொடுத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




