ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் |

தமிழில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. சிவாஜியின் கர்ணன் படம் ரீ ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. அடுத்து வந்த சில பழைய படங்களும் ஓடின. குறிப்பாக, விஜயின் கில்லி ரீ ரிலீசில் ஹிட் ஆனது. அதை தொடர்ந்து பல பழைய படங்கள் ரீ ரிலீஸ் ஆகின. அதில் ஒன்றிரண்டு படங்களே வெற்றி பெற்று, லாபம் சம்பாதித்து கொடுத்தனர். கடந்த சில மாதங்களில் வந்த ரீ ரிலீஸ் படங்களில் கேப்டன் பிரபாகரன், விஜயின் சச்சின் படங்களும் லாபம் கொடுத்தனர். ஆனால், அடுத்து வந்த குஷி ஓடவில்லை. கமலின் நாயகன் பிளாப் ஆனது. லேட்டஸ்ட்டாக வந்த ஆட்டோகிராப் படத்துக்கும் பெரிய வரவேற்பு இல்லை.
அடுத்து ப்ரண்ட்ஸ், அமர்களம், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்கள் வர உள்ளன. ரீ ரிலீஸ் படங்களில் சில படங்கள் மட்டுமே வெற்றி. மற்றவை தோல்வி. மீண்டும் ஒரு படத்தை கொண்டு வர பல லட்சங்கள் செலவு செய்யப்படுகிறது. டிஜிட்டல் ஆக்க அதிக உழைப்பு, பணம் தேவைப்படுகிறது. ஆனால், அது தோல்வி அடையும்போது சம்பந்தப்பட்டவர்கள் நஷ்டமடைகிறார்கள்.
இந்த பழைய படங்களை சாட்டிலைட், டிஜிட்டல் விற்க முடியாது. ஏற்கனவே அது விற்கப்பட்டு இருக்கும். தியேட்டர் வருமானம் மட்டுமே ரிலீஸ் செய்யப்பவர்களுக்கு கிடைக்கும். தியேட்டரிலும் இப்போது வரவேற்பு குறைந்து வருவதால், அடுத்த ஆண்டு அதிக அளவில் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படாது என்கிறார்கள்.