'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். 'லவ் டுடே, டிராகன், டியூட்' என ஹாட்ரிக் 100 கோடிபடங்களைக் கொடுத்துள்ளார். இந்த வருடம் அவரது நடிப்பில் 'டிராகன், டியூட்' படங்கள் வந்ததையடுத்து டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் வெளியீடு ஏற்கெனவே தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதீப் ரங்கநாதன் நடித்த மற்றொரு படமான 'டியூட்' படத்தின் வெளியீட்டையும் அதே நாளில் அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். அவர்கள் படத்தைத் தள்ளி வைக்க மறுத்துவிட்டனர். எனவே, 'எல்ஐகே' அவர்களாகவே முன்வந்து படத்தை டிசம்பருக்குத் தள்ளி வைத்தார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் டிவி உரிமை ஆகியவை விற்கப்படாத நிலையில் படம் டிசம்பர் 18ல் வெளியாகுமே என்ற சந்தேகம் திரையுலகில் இருந்தது. இருந்ததாலும் படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன், அந்த உரிமைகளை பட வெளியீட்டிற்குப் பிறகு விற்றுக் கொள்ளலாம் என அதிரடி முடிவு எடுத்துவிட்டாராம். அதனால், எந்த சிக்கலும் இல்லாமல் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்கிறார்கள்.