அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு | ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை |

நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியான நடிகையாக இருந்தவர். இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்து, அதன்பிறகு தனது காதலரான ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்ட பின் படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார். வருடத்திற்கு அவர் நடித்து ஒன்று இரண்டு படங்கள் மட்டுமே வருகின்றன. கடந்த வருடம் அவரது ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஹாப் (Half) என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற லோகா சாப்டர் 1 ; சந்திரா படம் போல இதுவும் டிராகுலா பின்னணியில் தான் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர் அதை உறுதிப்படுத்தவும் செய்கிறது. தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. கல்யாணிக்கு லோகா படம் கை கொடுத்தது போல அமலாபாலுக்கும் இந்த ஹாப் படம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.