அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு | ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை |

மலையாளத்தில் பஹத் பாசில், ஹிப்ஸ்டர், மிதுன் ஜெயசங்கர் மற்றும் பலர் நடிப்பில் 2024ல் வெளியான படம் 'ஆவேஷம்'. ஜித்து மாதவன் இயக்கியிருந்த இப்படம், கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம், பஹத் பாசிலின் சினிமா வாழ்க்கையில் முதல் 100 கோடியை கடந்த படம் என்ற சிறப்பை பெற்றது.
இப்படத்தின் 2ம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி அப்போதிருந்து ரசிகர்களால் கேட்கப்பட்டு வந்த நிலையில், படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன், தற்போது சூர்யா நடிக்கும் 47வது படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் பஹத் பாசில் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'ஆவேஷம் 2' படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2027 அல்லது 2028ல் படம் துவங்கும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.