'ரஜினி 173' படத்திற்கு மீண்டும் சிக்கல் ? | சினிமாகான் விழாவில் 'ராமாயணா' | கோஹினூர் வைரம் பின்னணியில் உருவாகும் படம் | மீண்டும் வெளியாகிறது 'அமர்க்களம் ' | சோலோ ஹீரோயினாக சாக்ஷி அகர்வாலின் திரில்லர் படம் | பிளாஷ்பேக் : மகனை அறிமுகப்படுத்திய கேஎஸ் கோபாலகிருஷ்ணன் | ஏப்ரல் 17ல் 4 படங்கள் ரிலீஸ் | பிளஷ்பேக் : 2 வண்ண தொழில்நுட்பத்தில் தயாரான அதிசயப்பெண் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'முட்ட கலக்கி' | 'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை |

தெலுங்கில் 'புஷ்பா' படத்தில் வில்லனாக நடித்து வரவேற்பை பெற்ற பஹத் பாசில் அதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகி வரும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சஷாங் எலேட்டி இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் நடிகர் சவுரப் சக்தேவா.
உத்தரகண்ட்டை சேர்ந்த பாலிவுட் நடிகரான இவர் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்த வந்த நிலையில் ஏற்கனவே புஷ்பா திரைப்படத்திலும் பஹத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ளார். மலையாளத்தில் கடந்த வருடம் இறுதியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'எக்கோ' என்கிற படத்தில் குரியச்சன் என்கிற மர்ம நபராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது இந்த புதிய தெலுங்கு படத்தில் இணைந்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.




