அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு | ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பூமிகா. ஹிந்தியிலும் ஒரு ரவுண்ட் வந்தவர் கடந்த சில ஆண்டுகளாக அழுத்தமான குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்தவாரம் இவரது நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛யுபோரியா'. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸாகி உள்ளது. சாரா அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ஒக்கடு, ருத்ரமாதேவி போன்ற படங்களை இயக்கிய குணசேகரன் இயக்கி உள்ளார். போதைக்கு அடிமையாகும் இளம் வயது ஆண்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை, எந்த எல்லைக்கும் போகும் பசங்கள் உள்ளிட்டவற்றை இந்த படம் பேசுகிறது. இப்பட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பூமிகா திடீரென உணர்ச்சி பெருக்கில் அழுதார்.
நிகழ்ச்சியில் பேசிய பூமிகா, ‛‛இந்த படத்தை பார்த்த பின்னர் என்னால் இரவு சரியாக தூங்க முடியவில்லை. திடீரென இரவு 1 மணி, 2 மணிக்கெல்லாம் தூக்கத்தை தொலைத்து எழுந்தேன். என் மனம் முழுக்க இந்த படத்தின் கேரக்டர் ஆக்கிமிரத்து கொண்டது'' என பேசியவர் திடீரென பேச முடியாமல் அழ துவங்கிவிட்டார். அவரை படக்குழுவினர் சமாதானம் செய்தனர். இருப்பினும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாததால் பேச்சை நிறுத்திக் கொண்டார்.
இந்த படத்தின் கதை, அந்த கேரக்டரின் தாக்கம் பூமிகாவை பாதித்துவிட்டது. அதன் காரணமாகவே அவர் மேடையில் அழுதுவிட்டார் என்றனர் படக்குழுவினர்.