நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தெலுங்கில் 2023ல் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் பின்னர் தமிழில் கில்லி என விஜய் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு இங்கேயும் வெற்றி பெற்றது. ஒக்கடு படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக கதாநாயகியாக நடித்திருந்தார் பூமிகா. இந்த நிலையில் இயக்குனர் குணசேகர் ருத்ரமாதேவி மற்றும் சாகுந்தலம் என தனது வரலாறு மற்றும் புராண படங்களை தொடர்ந்து புதிதாக யுபோரியா என்கிற படத்தை இயக்குகிறார்.
இதில் கதாநாயகியாக தெய்வத்திருமகள் சாரா அர்ஜுன் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் நடிகை பூமிகா ஆகியோரும் நடிக்கின்றனர். அந்தவகையில் ஒக்கடு படத்திற்கு பிறகு 23 வருடம் கழித்து மீண்டும் குணசேகரின் டைரக்ஷனில் நடிக்கிறார் பூமிகா என்பது குறிப்பிடத்தக்கது.
13 வயது முதல் 20 வயது வரையிலான டீனேஜ் பெண்கள் சந்திக்கும் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பிரச்சனைகள், அவற்றை பெற்றோர் எப்படி கையாள வேண்டும் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருக்கிறது.