தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது |

நடிகை பிந்து மாதவி, ‛வெப்பம்', 'கழுகு', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'பசங்க-2' ஆகிய படங்களில் நடித்தார். சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பிந்து மாதவி பின்னர் 'பிளாக்மெயில்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இதற்கிடையில் அவர் நடித்த 'தண்டோரா' என்ற தெலுங்கு படம், அடுத்தமாதம் திரைக்கு வருகிறது. படத்தில் அவருடன் நவ்தீப், நந்து, ரவி கிருஷ்ணா, மாணிகா சிக்கலா, மவுனிகா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் அறிமுகமான பிந்துமாதவி, 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கும் தெலுங்கு படம் இது. படம் தயாராகி ஒரு வருடத்திற்கு பிறகு இப்போது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தின் மூலம் நல்லதொரு ரீ என்ட்ரி கிடைக்கும் என்று நம்புகிறார் பிந்து மாதவி.