ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, ஜாக்சன்துரை, வெப்பம் போன்ற படங்களில் நடித்தவர் பிந்து மாதவி. அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக, பல படங்களில் அவர் கண்களை பார்த்து ரசித்தவர் பலர். சில ஆண்டுகளாக அவர் காணாமல் போய் இருந்தார். இப்போது மு.மாறன் இயக்கும் ‛பிளாக்மெயில்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார். இந்த படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ். அவருக்கு ஜோடி தேஜூ அஸ்வினி. ஆகவே, பிந்து மாதவி ஹீரோயின் இல்லை என தெரிகிறது.
அவரும் பட விழாவில் நான் ஒரு அர்த்தமுள்ள கேரக்டரில் நடிக்கிறேன் என்று பேசியிருந்தார். பிளாக்மெயில் சம்பந்தப்பட்ட கதையில் அவர் பாதிக்கப்பட்டவராக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சந்திரிகா என இன்னொரு நடிகையும் நடித்து இருக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் பிறந்த சந்திரிகா இதற்கு முன்பு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேய் ஆக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.