இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து | பிளாஷ்பேக்: இளையராஜா கங்கை அமரன் இணைந்த படம் | பிளாஷ்பேக் : பாலிவுட்டை கலக்கிய வாசன் | 25வது நாளில் 'மார்கன்', சில நாட்களில் ஓடிடியில்… | பேதங்களை மறந்து திறமைக்கு வாய்ப்பளிக்கும் தமிழ் சினிமா: ஷில்பா மஞ்சுநாத் | பிளாஷ்பேக்: படச் சுருளை எரித்துவிடச் சொன்ன தணிக்கை அதிகாரி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த கன்னட முன்னணி நடிகை |
தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது தொழிலதிபராகவும் மாறியுள்ளார். 'டியர் டைரி' என்ற சென்ட் பிராண்ட் ஒன்றை அவர் ஆரம்பித்து அறிமுகப்படுத்தியுள்ளார். சென்ட் என்பது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. அதை உங்களுக்காக இப்போது பகிர்கிறேன். உங்களுக்கு இது பிடிக்கும் என்று நம்புகிறேன் என ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்மிகாவின் அறிவிப்புக்கு அவரது காதலர் என கிசுகிசுக்கப்படும் விஜய் தேவரகொன்டா வாழ்த்து தெரிவித்துள்ளார். மற்றும் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறியுள்ளார்கள்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இதற்கு முன்பு '9 ஸ்கின்' என்ற பிசினஸ் பிராண்ட் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார். அவருக்கடுத்து இது போன்ற அழகு சாதனப் பொருட்கள் பிசினஸில் ராஷ்மிகாவும் நுழைந்துள்ளார்.