சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் |

இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா இருவர் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த 'அகண்டா' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அகண்டா 2ம் பாகம் உருவாகியுள்ளது. '14 ரீல்ஸ் ப்ளஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படம் நேற்று டிசம்பர் 5ம் தேதியன்று தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக தயாராக இருந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய பைனான்ஸ் கிளியர் செய்யாததால் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு உதவும் விதமாக பாலகிருஷ்ணா அவரது சம்பள தொகையில் இருந்து ரூ. 7 கோடியும், போயப்பட்டி ஸ்ரீனு அவரது சம்பளத்தில் இருந்து ரூ.4 கோடியும் விட்டுக் கொடுத்துள்ளனர். விரைவில் இந்த பிரச்னையை சுமுகமாக தீர்த்து அடுத்த கட்டமாக இப்படத்தை வருகின்ற டிசம்பர் 18ம் தேதி அல்லது 25ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர விநியோகஸ்தர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.