சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் |

கடந்த 2005ம் ஆண்டில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ், ஸ்ரீதேவி விஜயகுமார், கருணாஸ், குணால் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'தேவதையை கண்டேன்'. அந்த காலகட்டத்தில் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.
இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த நிலையில் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக இதன் தயாரிப்பாளர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஏற்கனவே தனுஷின் ‛3, மயக்கம் என்ன, அம்பிகாபதி' ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.