பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பாடகி சின்மயின் கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கி உள்ள படம் 'தி கேர்ள் பிரண்ட்'. ராஷ்மிகா மந்தனா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம். வருகிற நவம்பரி 7ம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு படத்தின் புரமோசன் நிகழ்வுகள் தொடங்கி உள்ளது.
ஐதராபாத்தில் நடந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கே.என் ராஷ்மிகாவை பாராட்டி பேசினார். அப்போது அவர் 'ராஷ்மிகா நேரம் பார்க்காமல் வேலை செய்கிறவர்' என்றார்.
இதனை மேடையிலேயே மறுத்து பேசிய ராஷ்மிகா, ''நான் அதிகமாகவே வேலை செய்கிறேன். ஆனால், இதை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். இதைத் தொடர்ந்து செய்யமுடியாது. 8 மணி நேரத்திற்குமேல் அதிகமாக வேலைபார்ப்பது நமது வாழ்க்கையை உடல் நலத்தைக் கெடுத்துவிடும்.
இந்த அதிக நேர வேலையைத் தவிர்க்கவில்லை என்றால் பின்னர் நாமே வருந்த வேண்டி வரும். உடல் நலமும், மனநலமும் கெட்டுவிடும். அலுவலகங்களில் 9 மணியிலிருந்து 5 மணி வரை என்று வேலை நேரம் உள்ளதுபோல், சினிமாத்துறையில் நமக்கும் அப்படியே இருக்க வேண்டும்.
அப்படியில்லாததால் மறுப்பு சொல்ல முடியாமல் நான் பல வேலைகளைச் செய்கிறேன். இருப்பினும் நான் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் ஒதுக்க விரும்புகிறேன். குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். தூக்கமும், உடற்பயிற்சியும் அவசியம். எதிர்காலத்தை நினைத்து நான் இப்போது கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
ராஷ்மிகாவின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. பலரும் ராஷ்மிகாவை பாராட்டி வருகிறார்கள். ஏற்கனவே பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, 8 மணிநேர வேலையை வலியுறுத்தியிருந்தார். இதன் காரணமாகவே 'ஸ்பிரிட், கல்கி 2' படங்களில் இருந்து அவர் விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.