நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தி கேர்ள் பிரெண்ட் படத்தை அடுத்து ஹிந்தியில் காக்டெயில் 2 , தெலுங்கில் மைசா போன்ற படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக நீண்ட காலமாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், வருகிற பிப்ரவரி மாதம் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும் இப்போது வரை அவர்கள் அதை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், தற்போது தனது தோழிகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார் ராஷ்மிகா. இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இரண்டு நாட்கள் எனக்கு விடுமுறை கிடைத்தது. அப்போது எனது நெருங்கிய தோழிகளுடன் நேரத்தை செலவழிப்பதற்காக இலங்கைக்கு சென்றிருந்தேன். அங்குள்ள அழகான பகுதிகளை சுற்றிப் பார்த்தோம். இது ஒரு மகிழ்ச்சியான சுற்று பயணமாக அமைந்தது'' என்று தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா.