பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

ஒரு பக்கம் புஷ்பா போன்ற படங்களில் கிளாமர் கதாநாயகியாக நடித்தாலும் இன்னொரு பக்கம் வலுவான கதாபாத்திரம் மற்றும் கதை அம்சம் கொண்ட படங்களையும் தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த வருடம் சவ்வா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தம்மா ஆகிய படங்களில் தனது நடிப்புக்காக பாராட்டைப் பெற்ற ராஷ்மிகா சமீபத்தில் தெலுங்கில் வெளியான தி கேர்ள் பிரண்ட் படத்தில் ஒரு அழுத்தமான டீனேஜ் பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ராஷ்மிகாவின் நடிப்பை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தி கேர்ள் பிரண்ட் படம் பார்த்துவிட்டு தேசிய விருதுக்கு தகுதியானவர் ராஷ்மிகா என்று தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபநாட்களில் மனம் நிறைந்து கைதட்டி ரசித்துப் பார்த்த படம் தி கேர்ள் பிரண்ட் தான். ராஷ்மிகா நீங்கள் நேஷனல் கிரஷ் மட்டுமல்ல இந்த கேர்ள் பிரண்ட் படத்திற்காக நேஷனல் அவார்டுக்கும் தகுதியானவர். புஷ்பா, அனிமல், குபேரா படங்களில் வித்தியாசமான நடிப்பை வழங்கியது போல இந்த படத்தில் எப்படி உங்களால் நம்பும்படியான அப்பாவித்தனத்தை முகத்தில் காட்ட முடிந்தது. எனக்கு தெரியும் நீங்கள் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.




