கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

“பத்ரகாளி” என்ற பெயரில் எழுத்தாளர் மகரிஷி எழுதிய நாவலை அதே பெயரில் திரைப்படமாக தனது “சினி பாரத்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்து, இயக்கி வெளியிட்டிருந்தார் இயக்குநர் ஏ சி திருலோகசந்தர். 'இசைஞானி' இளையராஜா தனது திரையிசைப் பயணத்தை ஆரம்பித்த புதிதில் அவரது நான்காவது திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் இந்த “பத்ரகாளி”. பிராமணக் குடும்பத்தின் பின்னணி கொண்ட இக்கதையின் நாயகனாக நடிகர் சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட, நாயகியாக தேர்வானவர்தான் நடிகை ராணி சந்திரா.
கேரள மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மிஸ் கேரளா பட்டத்தை வென்றிருந்த நிலையில், மலையாளத் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, சுமார் 60 திரைப்படங்கள் வரை மலையாளத்தில் நடித்திருந்த நிலையில், “பொற்சிலை”, “தேன் சிந்துதே வானம்” போன்ற ஓரிரு தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தும், தமிழில் ஒரு சரியான அறிமுகம் கிடைக்காதிருந்த நிலையில், இயக்குநர் ஏ சி திருலோகசந்தர் இவரை கதாநாயகியாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்த திரைப்படம்தான் இந்த “பத்ரகாளி”.
“பத்ரகாளி” திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து, ஓரிரு காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டியிருந்த நிலையில், ஏறக்குறைய முழுப் படப்பிடிப்பும் முடிவடையும் தருவாயில் இருந்த போது, துபாயில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தாய், சகோதரிகள் மற்றும் கலைக்குழுவினருடன் துபாய் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி முடித்து, திரும்பி வரும் வேளையில் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இவர்களது விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அனைவரும் உயிரிழக்க நேரிட்டது.
நடிகை ராணி சந்திராவின் எதிர்பாராத இந்த திடீர் மரணம் “பத்ரகாளி” படக் குழுவினைரை நிலை குலையச் செய்தது. கதையில் ஏதும் மாற்றம் செய்ய முடியாத நிலை இருக்க, அதே சமயத்தில் கதையின் நாயகியான ராணி சந்திரா சம்பந்தப்பட்ட படத்தின் உச்சக் காட்சிகளை எடுத்து முடிக்க வேண்டிய கட்டாயமும் படக் குழுவினரை நெருக்க, படத்தின் இயக்குநர் ஏ சி திருலோகசந்தரின் தீவிர யோசனைக்குப் பின், நடிகை ராணி சந்திராவைப் போன்ற தோற்றம் உள்ள துணை நடிகைகள் யாராவது கிடைப்பார்களா என தேடிப் பார்த்து, இறுதியில் அவரைப் போன்ற உடல்வாகு கொண்ட புஷ்பா என்ற ஒரு துணை நடிகையை தெரிவு செய்து, அவரை வைத்தே படத்தின் இறுதிக் காட்சிகளை படமாக்கினார் இயக்குநர் ஏ சி திருலோகசந்தர்.
ராணி சந்திராவிற்குப் பதிலாக வேறு ஒருவரை வைத்து படமாக்கியிருக்கின்றனர் என பார்வையாளர்களால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு படத்தின் உச்சக் காட்சி இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமையால் திறமையாக படமாக்கப்பட்டு, படமும் வெளிவந்து, ஒரு மாபெரும் வெற்றியையும் பதிவு செய்தது.