ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

யூகி சேது காமெடி நடிகராக அதிகம் அறியப்பட்டவர். காமெடியாக 'டாக் ஷோ' நடத்தி புகழ் பெற்றவர். ஆனால் அவர் ஒரு இயக்குனராகத்தான் சினிமாவில் நுழைந்தார். அவர் இயக்கிய முதல் படம் 'கவிதை பாட நேரமில்லை'. ரகுவரன், அமலா, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது இந்தியில் வெளியான 'அங்குசு' என்ற படத்தின் ரீமேக். எல் வைத்தியநாதன் இசையமைத்து இருந்தார்.1987ம் ஆண்டு வெளியானது.
1991ம் ஆண்டு வெளியான 'மாதங்கள் ஏழு' என்ற படத்தில் தான் யூகி சேது முதல் முதலில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தையும் அவர் இயக்கினார். இரண்டு படங்களுமே தோல்வி அடைந்ததால் படம் இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார்.




