கோஹினூர் வைரம் பின்னணியில் உருவாகும் படம் | மீண்டும் வெளியாகிறது 'அமர்க்களம் ' | சோலோ ஹீரோயினாக சாக்ஷி அகர்வாலின் திரில்லர் படம் | பிளாஷ்பேக் : மகனை அறிமுகப்படுத்திய கேஎஸ் கோபாலகிருஷ்ணன் | ஏப்ரல் 17ல் 4 படங்கள் ரிலீஸ் | பிளஷ்பேக் : 2 வண்ண தொழில்நுட்பத்தில் தயாரான அதிசயப்பெண் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'முட்ட கலக்கி' | 'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் |

'அலிபதுஷா' என்ற கதை 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஒரு கதை. ஒரு நவாப், அவரது குடும்பம் மற்றும் அவரது ஒழுக்கக்கேடான சகோதரனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றிய பிரபலமான கதையாகும்.
இந்தக் கதை 1930களில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஆனால் அந்த காலத்திலேயே அந்த படம் தோல்வியை தழுவியது. அதன் தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்டதாக கூட சொல்வார்கள்.
இதே கதையை மாடர்ன் தியேட்டர் ஆர்.சுந்தரம் மீண்டும் திரைப்படமாக எடுக்க விரும்பினார். முன்பு இந்த படம் ஏன் தோல்வியடைந்தது என்பதை பற்றி ஆய்வு செய்தார். கதை திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து மீண்டும் அந்த கதையை படம் ஆக்கினார். அதுதான் 'பாசவலை' 1957ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அன்றைய காலகட்டத்தில் வசூலை வாரி குவித்த படமாகவும் அமைந்தது.
இந்த படத்தில் எம்.கே. ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என். ராஜம், வி.கோபாலகிருஷ்ணன், வி.கே. ராமசாமி, அ.கருணாநிதி, டி.பி. முத்துலட்சுமி, குமாரி ராஜாமணி, தி.க. ராஜேஸ்வரி, பாக்யம், எம்.ஆர்.சந்தானம், எஸ்.எம். திருப்பதிசாமி, எம்.என். கிருஷ்ணன், சாயிராம், 'மாஸ்டர்' பாஜி, 'மாஸ்டர்' வெங்கடேஷ், 'ஜெயக்கொடி' கே.நடராஜன் உள்பட பாலர் நடித்தனர். ஏ எஸ் நாகராஜன் இயக்கினார், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தனர்.




