நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷும் தனது அண்ணனைப் போலவே சினிமாவில் நுழைந்து சில படங்களில் கதாநாயகனாக மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் ராதாமோகன் இயக்கிய கவுரவம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும் கூட இன்னும் தெலுங்கில் அவருக்கான சொல்லிக் கொள்ளும்படியான இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் 31ம் தேதி நடைபெற்றது. தனது நீண்ட நாள் தோழியான நயனிகா என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார் அல்லு சிரிஷ்.
இந்த நிலையில் தற்போது தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளார் அல்லு சிரிஷ். வரும் மார்ச் 6ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவரது அண்ணன் அல்லு அர்ஜுனனின் திருமணமும் இதே போல மார்ச் 6 2011ல் நடைபெற்றது தான் இப்படி ஒரு தேதி அமைந்தது.
‛‛இது ஏதேச்சையான ஒரு நிகழ்வு என்றும் அண்ணனின் திருமண நாளிலேயே எங்கள் திருமணம் நடப்பது ஒரு சிறப்பான ஒன்று” என்றும் கூறியுள்ளார் அல்லு சிரிஷ்.