பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாளத்தில் 2014ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பெங்களூரு டேஸ். அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் துல்கர் சல்மான், நிவின்பாலி என இளம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதனை 2016ல் பாஸ்கர் இயக்கத்தில் பெங்களூரு நாட்கள் என்கிற பெயரில் ரீமேக் செய்தனர். இதில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா ஆகியோர் நடித்திருந்தனர். மலையாளத்தில் அழகியலோடு வெளியான இந்த படம் இங்கே ரீமேக்கில் சொதப்பி தோல்வி படமாக அமைந்தது.
இந்த நிலையில் நடிகர் ராணா தனது தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிப்பில் காந்தா என்கிற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். தானும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக் பற்றி அவர் கூறும்போது, “மலையாளத்தில் அழகாக உருவாகி இருந்த பெங்களூர் டேஸ் திரைப்படத்தை தமிழில் ரீமேக் என்கிற பெயரில் எடுத்து சிதைத்து விட்டோம். அந்த படத்தின் படப்பிடிப்பின் போதே ஆர்யா என்னிடம், மச்சான் அந்த படத்தில் நிவின்பாலி பஹத் பாசில், துல்கர் சல்மான் எல்லோரும் இளமை துள்ளலோடு இருக்கிறார்கள். இங்கே நம்மை பார்க்கும்போது மிடில் ஏஜில் ரிட்டயர் ஆனவர்கள் போல காட்சியளிக்கிறோம் என்று கிண்டலாக கூறினார். கடைசியில் அதுதான் நடந்தது. சில படங்களை ரீமேக் செய்யாமல் அப்படியே விட்டு விடுவது தான் அழகு” என்று கூறியுள்ளார் ராணா.