தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் வெளியான ‛தி கேர்ள் பிரண்ட்' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக டாக்ஸிக் மனப்பான்மை கொண்ட ஆண்களிடம் இருந்து பெண்கள் எப்படி தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு படிப்பினையை தருவதாக இந்த படத்தின் கருத்து அமைந்துள்ளது பெண் ரசிகர்களிடம் அதிக பாராட்டை பெற்று வருகிறது. இந்த உற்சாகத்தில் இருக்கும் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது கொரியன் திரைப்படங்களில் நடிப்பதற்கு, தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, “கொரோனா காலகட்டத்தில் தான் கொரியன் படங்கள் பார்க்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு கொரியன் வெப் சீரிஸும் கிட்டத்தட்ட 16 மணி நேரம் ஓடக்கூடிய மொத்தம் 16 எபிசோடுகள் அடங்கியதாக இருந்தது. அதனால் கொரியன் படங்களின் மீதான ஆர்வம் எனக்குள் இயல்பாகவே உள்ளே நுழைந்து விட்டது. அதேசமயம் கொரியன் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் அதில் எனக்கு கொடுக்கப்படும் நல்ல கதாபாத்திரங்களை பொருத்து தான் அதை தேர்ந்தெடுப்பேன். நான் எவ்வளவு செலக்டிவாக கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என்று உங்களுக்கே தெரியும் இல்லையா ?” என கூறியுள்ளார் ராஷ்மிகா.