நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத் தலைப்பு சிக்மா என நேற்று அறிவிக்கப்பட்டது. படத்தின் புதிய போஸ்டரும் வெளியானது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடவில்லை. சோஷியல் மீடியாவில் பெரிய அளவு ஆதரவு தெரிவிக்கவில்லை. இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்தால், "எங்களுக்கு எந்த அறிவிப்பு வரவில்லை. அப்பா, மகன் உறவு குறித்து சரிவர புரியவில்லை. மகன் படம் குறித்து இதுவரை விஜய் பேசவில்லை. வாழ்த்தி ஒரு அறிக்கை, வீடியோ வெளியிடவில்லை. அதை மகனும் விரும்பவில்லை. ஆகவே சிக்மா விஷயத்தில் நாங்களும் அமைதியாக இருக்கிறோம். வருங்காலத்தில் அவர் வாழ்த்தி, எங்களையும் வாழ்த்த சொன்னால் அதை செய்வோம்.
அப்பா ஆதரவு இல்லாமல் சஞ்சய் தனியாக ஜெயிக்க விரும்புகிறார் போலும். இப்போது உள்ள இளைஞர்கள் தனித்துவமாக இருக்க விரும்புகிறார்கள். விஜய் மட்டுமல்ல, அவரை அறிமுகப்படுத்தி ஆளாக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் கூட பேரன் படம் குறித்து எதையும் பேசவில்லை, இதுவரை வாழ்த்தவில்லையே என்கிறார்கள். சிக்மா பட விழாவுக்காவது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி வருகிறார்களா என தெரியவில்லை. கோலிவுட்டில் எந்த வாரிசுக்கும் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதில்லை. ஏனிந்த புறகணிப்பு என புரியவில்லை என்ற குரலும் கேட்கிறது.