மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் 'சிக்மா' எனும் ஒரு படத்தை கடந்த பல மாதங்களாக இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம்,சம்பந்த் ராஜ், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சுமார் ஒரு நிமிடம் 9 நொடிகள் ஓடும் இந்த டீசரை பரபரப்பாக படத்தொகுப்பு செய்துள்ளனர். கதையை பெரிதளவில் டீசரில் கூறவில்லை என்றாலும் பணம் கடத்தல் சம்மந்தப்பட்ட படம் என காட்டியுள்ளனர். தமனின் பின்னனி இசையும் டீசருக்கு வலு சேர்த்துள்ளது. டீசராக நன்றாக இருக்கிறது. 17 மணிநேரத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. ஒரு இயக்குனராக ஜேசன் தனது முதல் படத்திலேயே ஜெயிப்பாரா என்பது படம் வெளியானதும் தெரிந்துவிடும்.