பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்திற்கு 'சிக்மா' என்ற தலைப்பு வைத்துள்ளார்கள். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியானது.
சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா கதாநாயகியக நடிக்க, நடன இயக்குனர் ராஜு சுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஒரு ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 60 நாட்கள் நடைபெற்றுள்ளது. இன்னும் ஒரு பாடல் மட்டும் படமாக வேண்டி இருக்கிறதாம். அதை முடித்தபின் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாக உள்ளது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
தனது மகன் ஜேசன் சஞ்சயின் முதல் பட தலைப்பு அறிவிப்பு குறித்து அவரது அப்பா விஜய் வாழ்த்துகளைத் தெரிவிப்பாரா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். விஜய், அவரது மனைவி, மகன், மகளை விட்டுப் பிரிந்து தனியாக இருப்பதாக கடந்த சில வருடங்களாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. என்ன இருந்தாலும் மகனின் முதல் படம் என்பதால் அவரது வாழ்த்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.