திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் |

எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'தளபதி கச்சேரி' நேற்று முன்தினம் மாலை வெளியானது. நேற்று மாலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் யு டியூப் தளத்தில் 10 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது.
இப்பாடல் விஜய்யின் முந்தைய பாடல்களின் சாதனையை முறியடிக்கும் என்று அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த 'தி கோட்' படப் பாடலான 'விசில் போடு' பாடல் 24 மணி நேரத்தில் 24.8 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை முறியடிக்காமல் 'தளபதி கச்சேரி' வெறும் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்தது விஜய் ரசிகர்களுக்கும், அனிருத் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
விஜய்யின் அரசியல் காரணமாக அவர் மீதான நடுநிலை ரசிகர்களின் ஈர்ப்பு குறைந்ததா அல்லது குறுக்கு வழியில் 'பாட்' வைத்து பாடல்களின் பார்வையை ஏற்றிவிடாமல் தயாரிப்பு நிறுவனம் தவிர்த்துவிட்டதா என்பது தெரியவில்லை. இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் 'ரியல் டைம் வியூஸ்' என ஒரு வியூஸ் கணக்கைத் தர வாய்ப்புள்ளது.