இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' |
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'பிளாக்மெயில்'. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் தேஜூ அஸ்வினி. ஆகஸ்ட் முதல் தேதியில் படம் வெளிவருகிறது. படத்தில் நடித்திருப்பது பற்றி தேஜூ அஸ்வினி கூறியிருப்பதாவது: 'படாக் படாக்' பாடலில் ஜிவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து நடனமாடினேன். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. நாங்கள் இருவரும் வைரல் ஜோடியானோம். எங்கள் ஜோடி பொருத்தம் குறித்து பலரும் பாராட்டினார்கள். அதுவே நான் இந்த படத்தில் இணைய காரணமானது. ஏற்கெனவே இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் எனக்கு தனி அடையாளத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.
வழக்கமான நடிப்பைத் தாண்டி பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க 'பிளாக்மெயில்' இடம் கொடுத்தது. புதுவிதமான அனுபவமாக இது அமைந்தது. இயக்குநர் மு. மாறனின் முந்தைய படங்களான 'கண்ணை நம்பாதே', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும். 'பிளாக்மெயில்' படத்தில் என்னை கதாநாயகியாக கேட்டபோதும் நிச்சயம் நடிப்பை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரமாக அமையும் என்ற நம்பிக்கையில் சம்மதித்தேன். ஜிவி பிரகாஷ் உடன் இதற்கு முன்பு கலர்புல்லான மியூசிக் வீடியோவில் பணிபுரிந்திருந்ததால் இந்த வாய்ப்பு அவர் மூலம் எனக்கு அமைந்தது'' என்றார்.