பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

'இரவுக்கு ஆயிரம் கண்கள்','கண்ணை நம்பாதே' போன்ற படங்களை இயக்கியவர் மு.மாறன். தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து 'பிளாக் மெயில்' எனும் படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிந்து மாதவி நடித்துள்ளார். லிங்கா, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதியன்று திரைக்கு வருவதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸ் தள்ளிப்போனது. பின்னர் ஆக., 22ல் வெளியிட முயற்சிகள் நடந்தன, ஆனால் நடக்கவில்லை. தற்போது இப்படம் வருகின்ற செப்டம்பர் 12ந் தேதியன்று திரைக்கு வருகிறது என புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.