ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கமாலினி முகர்ஜி. அதற்கு முன்னரே ஹிந்தியிலும் தெலுங்கிலும் நடித்திருந்த இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் அதிக அளவில் நடித்து வந்தார். அதேசமயம் கடந்த 2014 ல் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளியான கோவிந்துடு அந்தரிவாடலே படத்தில் நடித்த பிறகு தெலுங்கில் இவர் வேறு எதுவும் படங்களில் நடிக்கவே இல்லை. அதன்பிறகு தமிழில் இறைவி, மலையாளத்தில் புலி முருகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிப்பை விட்டு ஒதுங்கி விட்டார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெலுங்கு திரையுலகை விட்டு தான் ஒதுங்குவதற்கு காரணம் தான் கடைசியாக நடித்த கோவிந்துடு அந்தரிவாடலே படம் தான் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார் கமாலினி முகர்ஜி.
இதுகுறித்து அவர் கூறும்போது “அந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் நல்லபடியாக தான் நடந்தது. ஆனால் படம் வெளியான போது படத்தில் என் கதாபாத்திரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். படத்திற்கு என்னுடைய கதாபாத்திரம் தேவையில்லை என நினைத்திருந்தால் எடிட்டிங் டேபிளிலேயே அதை நீக்கி இருக்கலாம். எதற்காக இந்த படத்தில் நடித்தோம் என்கிற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தி விட்டது அந்த படம். ஆனால் இதற்கு அந்த படத்தில் நடித்த சக நடிகர்களும் படக்குழுவோ காரணம் இல்லை. அதனால்தான் அதற்கு அடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.