ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

'டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகிவிட்டார். அந்த படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றனர். அனஸ்வரா ராஜன் ஹீரோயின். இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் ஒரே கட்டமாக மின்னல் வேகத்தில், 35 நாட்களில் முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், காதல் கதையாக உருவாகி உள்ளது. “லவ்வர், டூரிஸ்ட் பேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.