ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

'பைசன்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன். கதைப்படி அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த ராணி என்ற கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார். அந்த அனுபவம் குறித்து அவர் பேசுகையில், ''பரியேறும் பெருமாள் படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. ஆனால் அது நடக்கவில்லை. எனக்கு மட்டுமல்ல என் அப்பாவுக்கும் மிகவும் பிடித்த படமாக அது இருந்தது. மாரி செல்வராஜ் இயக்கும் படங்களின் டிரைலர், டீசர் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை கூட ஆர்வமாக பார்ப்பேன். இந்த படத்திற்காக அழைப்பு வந்தபோது மறுக்காமல் ஒத்துக் கொண்டேன்.
'பிரேமம்' படத்தில் நடித்த போது எனக்கு ஒரு மன நிறைவு கிடைத்தது, நிறைய கற்றுக் கொண்டேன். அந்த அனுபவம் பைசன் படத்திலும் கிடைத்தது. திருநெல்வேலியில் வயலில் இறங்கி நாற்று நடுவது, செங்கல் சூளையில் வேலை செய்வது என பல புதிய அனுபவங்கள் கிடைத்தன. அந்த மக்களோடு பழகியதும் மகிழ்ச்சி. ஹீரோ அக்காவாக நடித்த ரஜிஷா விஜயனும் நானும் நெருங்கிய தோழிகள் ஆகி விட்டோம். மறக்க முடியாத பல அனுபவங்களை பைசன் தந்தது'' என்றார்.